திருச்சி மாவட்டத்தில் இன்று 524 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
திருச்சி மாநகர், புறநகரில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை 524 இடங்களில் முதல் மற்றும் 2-வது தவணை கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் மற்றும் அரியமங்கலம் உள்ளிட்ட 4 கோட்டங்களுக்கும் உட்பட்ட 65 வார்டுகளிலும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள், பூங்காக்கள் உள்பட 200 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இவற்றில் தலா 500 டோஸ் வீதம் மொத்தம் 1 லட்சம் பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
புறநகர் பகுதியான திருவெறும்பூர், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், துறையூர், உப்பிலியபுரம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் ஆகிய வட்டாரங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சமூகநலக் கூடங்கள், பள்ளிகள் என 324 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.
மாவட்டம் முழுவதும் இன்று மொத்தம் 524 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu