திருச்சியில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சியில் கொரோனா  மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் நேரு ஆய்வு
X

திருச்சி தில்லைநகரில் நடந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சியில் இன்று நடந்த 6-வது மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனாவை அடியோடு ஒழிப்பதற்காக தமிழகத்தில்இன்று ஆறாம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் முழுவதும் இன்று மட்டும் ஒருலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி பகுதியில் மட்டும் இன்று 202 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கியது. தில்லைநகர் கி.ஆ .பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 6-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார்.

இதில் மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future