திருச்சியில் இன்று ஒரே நாளில் 742 பேருக்கு கொரோனா

திருச்சியில் இன்று ஒரே நாளில் 742 பேருக்கு கொரோனா
X
பைல் படம்
திருச்சியில் இன்று ஒரே நாளில் 742 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக அதிகரித்து கொண்டே வந்த கொரோனா தொற்று இன்று (24-1-2022) ஒரே நாளில் மட்டும் 742 பேருக்கு உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 569 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து 4,541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி என்று அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!