கொரோனா ஊரடங்கால் திருச்சியில் சிக்கிய சீன வாலிபர் அனுப்பி வைப்பு

கொரோனா ஊரடங்கால்  திருச்சியில் சிக்கிய சீன வாலிபர் அனுப்பி வைப்பு
X
கொரோனா ஊரடங்கால் விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கி இருந்த சீன வாலிபர் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சீன நாட்டை சேர்ந்தவர் மோஷிஷி (வயது39). இவர் விசாகாலம் முடிந்து பல நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்தார். கொரோனா பரவல் காரணமாக சீனாவுக்கு விமானம் இயக்கப்படவில்லை. இதனால் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் சீனாவுக்கு விமான போக்குவரத்து தொடங்கியதை தொடர்ந்து அவர் சொந்த நாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று காலை சிறப்பு முகாமில் இருந்த அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்ற அவர், அங்கிருந்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!