திருச்சி மாநகர், புறநகரில் இன்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

திருச்சி மாநகர், புறநகரில் இன்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்
X
திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் கொரோனா-பூஸ்டர் தடுப்பூசி இன்று செலுத்தும் இடங்கள் விவரம்.

திருச்சி மாநகர், புறநகரில் கொரோனா-பூஸ்டர் தடுப்பூசி இன்று செலுத்தும் இடங்கள் விவரம்

திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் கொரோனா மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சிமாநகரில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், தெப்பக்குளம், இ.பி.ரோடு, பீரங்கிகுளம், இருதயபுரம், எடமலைப் பட்டிபுதூர், தென்னூர் உள்ளிட்ட 18 இடங்களில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி கோவாக்சின், கோவிஷீல்டு முதல் தவணை, 2-ம் தவணை செலுத்தப்படுகிறது.

மேலும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகம், ஸ்ரீரங்கம் ரெங்கா பள்ளி, திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி, கும்பகோணம் சாலை அங்கன்வாடி மையம், பூசாரி தெரு அங்கன்வாடி மையம், வெனிஸ் தெரு அங்கன்வாடி மையம், தையல் கார தெரு, மதுரை ரோடு ஜீவாநகர், வரகனேரி ராமசாமி தேவர் மருந்தகம், இ.பி.ரோடு அங்கன்வாடி மையம், வரகனேரி மேட்டுத் தெரு அங்கன்வாடி மையம், சங்கிலியாண்டபுரம் மாநகராட்சி நீர்தேக்க தொட்டி, மேலகண்கண்டார் கோட்டை பஞ்சாயத்து பள்ளி, நாகம்மை நூலகம், செங்குளம் காலனி ஹவுசிங் போர்டு, சுப்பிரமணியபுரம் டி.வி.கே.தெரு அங்கன்வாடி மையம், வார்டு36-ல் ஸ்டார் நகர் அங்கன்வாடி மையம், வார்டு 35-ல் ஆர்.எஸ்.புரம் பார்க், மிஷன் கோவில் வளாகம், கே.கே.நகர் ரெங்கநகர், காஜாபேட்டை மாநகராட்சிபள்ளி, கீழப்புதூர் அங்கன்வாடி மையம், கருமண்டபம் தெற்கு தெரு அங்கன்வாடி மையம், பெரியமிளகுபாறை அங்கன் வாடி மையம், பாரதிநகர் மாநகராட்சி நீர்த்தேக்க தொட்டி, வாமடம் அங்கன்வாடி மையம், உய்யக்கொண்டான் திருமலை ஆர். சி.பள்ளி, புத்தூர் மந்தை அங்கன்வாடி மையம், சோழராஜபுரம், காந்திபுரம், உறையூர் காளையன் தெரு, ஜெகன்நாதபுரம், திருவெறும்பூர் அம்மன் நகர், மாரியம்மன் கோவில் தெரு, உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் தெரு ஆகிய இடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதுபோல புறநகர் மாவட்டத்தில் திருவெறும்பூர், மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி. மண்ணச்சநல்லூர், துறையூர், உப்பிலியபுரம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் ஆகிய 14 வட்டாரங்களில் உள்ள 64 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2-ம் தவணை செலுத்தப்படுகிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!