திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் நகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்கள் பயணிகள் மாணவ மாணவிகள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மெயின் காட் கேட் பகுதிகளில் அமைப்பின் சார்பில் முக கவசம் அணிதல் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது நமக்கு பாதிப்பு ஏற்பட்டால் நம்மால் நமது குடும்ப உறவுகள் நண்பர்கள் எப்படி பாதிக்கபடுவார்கள்கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் மா.நித்தியா கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அமைப்பின் நிர்வாகிகள் பேருந்து நிலையத்தில் கடைகளில் இருந்த பொதுமக்கள் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் குழந்தைகள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் கெளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் எஸ்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அமைப்பின் துணை தலைவர் வே. நடராஜா, கௌரவ தலைவர் டாக்டர் லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் இளையராஜா, மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, இணை செயலாளர் அல்லிக்கொடி விளையாட்டு பிரிவு செயலாளர் சுரேஷ் பாபு, ஜெகன், பார்த்திபன், மதியழகன், பிரிட்டோ, எழில் மணி, ராஜேஷ், மகேஷ்வரன், ,உதய், சத்ய மூர்த்தி ,குமார் முகமது பாசில், சூரிய நாராயணன் மற்றும் சமூக நலத்துறை அலுவலக பணியாளர்கள் த.ரோஸி, வீ.காஞ்சனா, இ.ரஞ்சிதா சுப்ரமணி மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் அமைப்பின் சார்பில் கடந்த 10 நாட்களாக திருச்சி மாவட்ட நகர பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன், புத்தூர் கே. கே. நகர்,பால்பண்ணை மன்னார்புரம் டி. வி. எஸ் டோல்கேட், எடமலைபட்டிபுதூர், கருமண்டபம் பகுதியிலும் புறநகர் பகுதிகளான போச்சம்பட்டி நத்தமாடிபட்டி, அல்லித்துரை, துவாகுடி, திருவெறும்பூர் மணிகண்டம், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முக கவசம் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu