திருச்சியில் நூலக வாசகர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் நூலக வாசகர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

நூலகத்திற்கு வந்த வாசகர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

திருச்சியில் நூலக வாசகர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது.

திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நூலக வாசகர்களுக்கு கொரொனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.நூலகர் புகழேந்தி வரவேற்றார்.

புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா பங்கேற்று வாசகர்களுக்கு முக கவசம் வழங்கினார்.

கொரொனா பாதிப்பிலிருந்து நம்மையும் சமூகத்தையும் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வாக இருக்கவேண்டும். மருத்துவர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். வெளியிடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்தல் வேண்டும்.சமூக இடைவெளியை பேண வேண்டும். கைகளை சுத்தமாக்க கிருமி நாசினி திரவங்களை பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சுத்தமான சமச்சீரான உணவு, நீர் எடுத்துகொண்டு உடற்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை செய்து உடலையும் மனதையும் திடமாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தவறாமல் செலுத்தி கொள்ளவேண்டுமென எடுத்துக்கூறுப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!