கொரோனா விழிப்புணர்வு நடைபயண இராணுவ வீரருக்கு திருச்சியில் வரவேற்பு
கொரோனா அலை அதிகரித்த காலத்தில் தன் உயிரை பொருட்படுத்தாது உதவிய அனைத்து நாட்டு பிரதமர்கள், முதல்வர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், அனைத்து ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக 197 நாடுகளின் தேசியக்கொடியை சுமந்து எஸ். பாலமுருகன் என்பவர் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள் பிரிவில் பணியாற்றி வரும் இவர் கொரோனாவால் உயிரிழந்த அனைத்து நாட்டு மக்களுக்கும் நினைவு கூறும் நோக்கில் அணையா விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தியும்,மனித இனத்தைக் காக்க கோவிட் - 19 இரண்டாவது தடுப்பூசி அவசியம் மற்றும் கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாத்து கல்வி வழங்கிட வேண்டும் என்றும், நோயினை வெல்ல நாள்தோறும் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து அவசியம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் இராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை நடை பயணம் மேற்கொள்கிறார்.
திருச்சி மாவட்டத்திற்கு வந்த அவரை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் , சிலம்பம் அரவிந்த், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், நிர்வாகி ஆர்.கே.ராஜா மற்றும் ரெக்கார்டர் ஜெட்லி ஆகியோர் திருச்சி காவேரி பாலம் அருகில் இன்று காலை 10.30 மணியவில் வரவேற்று பொன்னாடை அணிவித்து பயணம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி வைத்தார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu