திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 46 பேர் பாதிப்பு -ஒருவர் பலி

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 46 பேர் பாதிப்பு -ஒருவர் பலி
X
திருச்சியில் கொரோனாவால் 46 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார் .

திருச்சி மாவட்டம் முழுவதும் தற்போது 607 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக கொரோனாவிற்கு யாரும் பலியாக வில்லை. இந்த நிலையில் இன்று ஒருவர் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!