திருச்சி: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் இடங்கள்

திருச்சி: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெறும் இடங்கள்
X
திருச்சி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை முதல் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி பெருநகர மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் டிசம்பர்-2021 மாதம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. முசிறி கோட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை), துறையூர் கோட்டத்தில் 7-ந் தேதியும், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 10-ந் தேதியும், லால்குடி கோட்டத்தில் 14-ந் தேதியும், திருச்சி கிழக்கு கோட்டத்தில் 17-ந் தேதியும், திருச்சி நகரிய கோட்டத்தில் 21-ந் தேதியும், மணப்பாறை கோட்டத்தில் 28-ந் தேதியும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே இந்த மாதத்தில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!