திருச்சி மாநகரில் குற்றங்களை தடுப்பது பற்றிய ஆலோசனை கூட் டம்

திருச்சி மாநகரில் குற்றங்களை தடுப்பது பற்றிய ஆலோசனை கூட் டம்
X

திருச்சியில் குற்றத்தடுப்பு பணிகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

திருச்சி நகரில் குற்றங்களை தடுக்க ஆட்டோ ஓட்டுனர்கள், வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

திருச்சி மாநகர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று மாலை திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை ஆணையர் சக்திவேல் தலைமையில், சட்டம்-ஒழுங்கை காக்கவும், குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் கோட்டை பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பழைய இரும்பு உள்ளிட்ட கத்தி, அரிவாள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளை அழைத்து அவர்களுக்கு குற்றங்களை தடுப்பதற்கு தங்களால் ஆன உதவிகளை செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!