திருச்சியில் மூத்த குடிமக்கள் தபால் வாக்குகள் அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.
85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதத்திற்கு குறைவில்லாமல்) தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடைமுறை தொடா;பாக திருச்சிராப்பள்ளி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று (03.04.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்மற்றும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், வேட்பாளர்கள் தங்களால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பட்டியலினை உதவி தேர்தல் நடத்தும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்து அவர்களை இந்த வாக்கு பெறும் நடைமுறையினை கவனிக்க அனுப்பி வைக்கலாம் எனவும் முகவர்கள் எவரும் கட்சியின் அடையாளங்களையோ அல்லது வேட்பாளர்களின் சின்னங்களையோ பிரதிபலிக்கும் வகையிலான எந்தவொரு பொருளும் கொண்டு செல்லக்கூடாது எனவும், வாக்காளர்களை கவரும் எந்தவொரு செயலும் செய்தல் கூடாது எனவும், மேற்கண்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்காளர்கள் தபால் வாக்களிக்கும் போது அவர்களை குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்க வலியுறுத்தக் கூடாது எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமாரி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தோ;தல்) சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu