திருச்சி தொழிலாளர் அலுவலகம் முன் கட்டிட தொழிலாளர்கள் பெருந்திரள் போராட்டம்
திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டிட தொழிலாளர்கள் தொழிலாளர் நல அதிகாரியிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நலவாரிய அலுவலகங்களில் கட்டுமான தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெருந்திரள் போராட்டம் நடத்தினர்.
திருச்சியில் இன்று 27.8.2024 காலை 10மணியளவில் செங்குளம் காலனியில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
வாரியம் முடிவு செய்த ஓய்வூதியம் ரூபாய் 2000 வழங்குதல்,கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள வீடு கட்டும் திட்டம் ரூபாய் 4 லட்சத்தை செயல்படுத்த கோருதல், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்பட வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட தலைவர் எம்ஆர் முருகன் தலைமையில் நடைபெற்றது .
போராட்டத்தை மாநிலத் துணைத் தலைவர் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுரேஷ்துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் செல்வகுமார் நிறைவுரையாற்றினார்.திருச்சி மாவட்ட ஏஐடியுசி தலைவர் நடராஜா வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பழனியப்பன், மருதம்பாள், முத்துலெட்சுமி, இருதயசாமி, வீராசாமி, துரைராஜ், சுமதி, சந்திரா, ரஜியாபேகம், வித்யா, பூபதி, பழனியம்மாள், செந்தாமரை, மீனாட்சி, பல்கிஸ்பானு, சவுந்தர்யா ,தனலெட்சுமி, சங்கரதாஸ், லெட்சுமி, மகாலெட்சுமி ,விஜயா, லெட்சுமிபிரபா, ஹேமலதா, விசாலாட்சி, ஜெயலெட்சுமி, ஜெகதீஸ்வரன், குமரேசன் ,நசீமா, சுப்பிரமணி ,நாகராஜ், லெட்சுமி ,கண்ணகி, மோகன் ,பழனியம்மாள், சுரேஷ் ,குணா ,நதியா, வியாகுலமேரி, அம்சவள்ளி, பிரேமா, ராஜம்மாள் ,ராமேஸ்வரி, ராசாத்தி ,இந்திரா, உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் அலுவலர் அவர்களிடம் கட்டுமான தொழிலாளர்களுக்கு இன்று வரை நிலுவையில் இருந்த கோரிக்கை மனுவை வழங்கி பல்வேறு மனுக்கள் மீது உடனடி தீர்வுகாண கோரிக்கை வைத்தனர். திரண்டு இருந்த தொழிலாளர்கள் மத்தியில் கோரிக்கை தீர்வு குறித்து தொழிலாளர் அலுவலர் உரையாற்றினார். அதன் பின்னரே காலை 11:15க்கு போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் முத்தழகு நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu