திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணி: அமைச்சர் நேரு ஆய்வு
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணியை அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் ரூபாய்.349.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (23.10.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் ரூபாய்.349.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் நேரு கூறியதாவது:-
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப் பணி ரூ.159 கோடி, பல்வகைப் பயன்பாட்டு மையம் கட்டுமானப் பணி ரூ.84.78 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி ரூ.65.90 கோடி, சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.40.30 கோடி என மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்.
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி மொத்த பரப்பளவு 40.60 ஏக்கர். கட்டுமானப் பரப்பளவு 7.02 ஏக்கர் புறநகர்பேருந்து நிறுத்த தடங்கள் 124. நீண்ட நேர பேருந்து நிறுத்த தடங்கள் 142. குறைந்த நேர நிறுத்த தடங்கள் 78. ஆக மொத்த பேருந்து நிறுத்த தடங்களின் எண்ணிக்கை 404. நகரப்பேருந்து நிறுத்த தடங்கள் 60. கடைகளின் எண்ணிக்கை 70. நான்கு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 556. இரண்டு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 1125. ஆட்டோ ரிக்ஷா நிறுத்தங்களின் எண்ணிக்கை 350. நகரும் படிகட்டுகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம்
மொத்த பரப்பளவு 5.20 ஏக்கர் அடித்தள கட்டுமான பரப்பளவு 1.47 ஏக்கர் தரைத்தள கட்டுமான பரப்பளவு 2.46 ஏக்கர் முதல் தள கட்டுமான பரப்பளவு 2.29 ஏக்கர் 2ஆம் தளம், 3ஆம் தளம் மற்றும் 4ஆம் தள கட்டுமானங்களின் பரப்பளவு 0.22 ஏக்கர் தரைத்தள கடைகளின் எண்ணிக்கை 149. முதல் தள கடைகளின் எண்ணிக்கை 193 ஆகும்.
கனரக சரக்கு வாகன முனையம்
மொத்த பரப்பளவு 29.00 ஏக்கர் கட்டுமான பரப்பளவு 2.88 ஏக்கர் தொகுப்பு -1 வாகன நிறுத்த தடங்கள் 256, தொகுப்பு -2 வாகன நிறுத்த தடங்கள் 104. தரைத்தள கடைகள் 20. முதல் தளம் - தங்குமிட வசதி, உணவக கட்டிடம் ஆகியவை அமைய உள்ளது.
சாலைகள், மழைநீர்வடிகால் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
சிமெண்ட் கான்கிரீட் சாலை நீளம் 1048 மீ. அகலம் 36 மீ.(ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதி). சிமெண்ட் கான்கிரீட் சாலை நீளம் 744 மீ. அகலம் 24 மீ.(கனரக சரக்கு வாகன முனையம் பகுதி). ஒருங்கிணைந்த பேருந்து முனைய பகுதியில் பசுமை பரப்பு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் வசதி ஆகியவை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,நகரப் பொறியாளர்.பி.சிவபாதம், மாவட்ட நகர்ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, செயற்பொறியாளர் கே.எஸ்.பாலசுப்பிரமணியன், அரசு அலுவலர் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu