தொங்கு பாலம் கட்டுமான பணி 4 மாதத்தில் முடிவடையும்- திருநாவுக்கரசர் எம்.பி.

தொங்கு பாலம் கட்டுமான பணி 4 மாதத்தில் முடிவடையும்- திருநாவுக்கரசர் எம்.பி.
X

தொங்குபாலம் கட்டுமான பணி தொடங்க உள்ள இடத்தில் திருநாவுக்கரசர் எம்.பி. ஆய்வு செய்தார்.

திருச்சி அரிஸ்டோ தொங்கு பாலம் கட்டுமான பணி 4 மாதத்தில் முடிவடையும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் (அரிஸ்டோ மேம்பாலம்) கட்டுமான பணி கடந்த 8 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளது .இதன் காரணமாக அந்தப் பாலத்திற்கு தொங்கு பாலம் என பெயர் வந்தது .பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 62 சென்ட் நிலம் மாநில அரசின் நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைப்பு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் திருநாவுக்கரசர் எம்.பி. மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை மூன்று முறை சந்தித்து பாலம் கட்டுமான பணிக்கு தேவையான 66 சென்ட் நிலம் வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு துறை அனுமதி அளித்தது. இதன் பலனாக கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த மதில்சுவர் அகற்றப்பட்டு முள் செடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநாவுக்கரசர் எம்.பி. இன்று பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட உள்ள இடத்தில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தொங்கு பாலம் கட்டுமானப் பணி அது தொடங்கிய 4மாத காலத்தில் நிறைவு பெறும். இப்பணி தொடங்குவதற்கு ஒத்துழைப்பு கொடுத்த தமிழக முதல்வர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.அப்போது அவருடன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜன், பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் டெக்ஸ்,சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!