திருச்சி மாரீஸ் மேம்பாலத்தில் தார்சாலை அமைக்க இந்திய கம்யூ. கோரிக்கை
திருச்சி மாரீஸ் மேம்பாலத்தில் ஜல்லி கற்களுடன் உள்ள சாலை
திருச்சி மாநகரை இணைக்கும் முக்கிய சாலையாக இருக்கும் மாரீஸ் தியேட்டர் மேம்பாலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள்,வியாபாரிகள் செல்லக்கூடிய பாலமாகும்.
கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பெய்த மழையால் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் பாலத்தை அகலப்படுத்தாமல் இருப்பதை கொண்டு பேண்டேஜ் போட்டு சரிசெய்துகொண்டு இருக்கும்போதே சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டார்கள்.
இதில் இருசக்கர,4 சக்கர வாகனங்களை அனுமதித்தார்கள்.அப்போதே சாலையை சரிசெய்ய ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு சாலை ஓரளவு சமன் செய்யப்பட்டுவிட்டது. மாரிஸ் தியேட்டர் ஒரமும் கட்டை கட்டப்பட்டுள்ளது. ஆனால் புதியதார்சாலை இன்னும் முழுமையாக போடப்படாமல் உள்ளது. வெறும் ஜல்லிகளை மட்டும் கொட்டிவிட்டு நேற்று முதல் முழுமையான பயன்பாட்டிற்கு மாநகராட்சி நிர்வாகத்தால் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஜல்லிகற்கள் சிதறி கிடப்பதால் இருசக்கர வாகனத்தில் வருவோர் தடுமாறி விழக்கூடிய சூழ்நிலையும். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் வாகனத்தில் இருந்து தவறி விழுந்தால் காயமும் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்போது தீபாவளி நேரம் என்பதால் ஜவுளிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கஇந்த சாலையை மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். எனவே மாவட்டநிர்வாகம் இதில் கவனம் செலுத்தி புதியதார்சாலை போடப்பட்டு முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டு கோள் விடப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu