திருச்சி மாவட்டத்தில் 1,139 விநாயகர் சிலைகளுக்கு பிரதிஷ்டை

திருச்சி மாவட்டத்தில் 1,139 விநாயகர் சிலைகளுக்கு பிரதிஷ்டை
X

விநாயகர் சிலை பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் 1,139 விநாயகர் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக விநாயகர் சிலை பொது இடங்களில் வைப்பதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனா பயம் வரவே நீங்கி விட்டதால் மக்கள் விநாயகர் சிலைகளை தாராளமாக வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் திருச்சி புறநகர் பகுதிகளில் 909 விநாயகர் சிலைகளும், திருச்சி மாநகரப் பகுதியில் மட்டும் 230 விநாயகர் சிலைகள் என மொத்தம் 1,139 சிலைகள் பொது இடங்களில் வைத்து விழா குழுவினரால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் இருக்கும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற இரண்டாம் தேதி இந்த சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story