மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோடி அரசு எதிர்கட்சிகளை ஒடுக்குவது மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது அடக்குமுறையை ஏவி அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் அத்துமீறும் மோடி அரசை கண்டித்து இன்று காலை திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஆரோக்கியராஜ், மாநில துணைத் தலைவர் சுஜாதா, மாநில செயலாளர் வக்கீல் இளங்கோ, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், தொட்டியம் சரவணன், மாநகர் மாவட்ட துணைத்தலைவர்கள் காளீஸ்வரன், வில்ஸ் முத்துக்குமார், சிக்கல் சண்முகம், வக்கீல் சந்திரன், கிரேசி மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் கோட்ட தலைவர்கள் ஸ்ரீரங்கம் சிவாஜி சண்முகம், மலைக்கோட்டை ரவி, பாலக்கரை ஜெரால்ட், காட்டூர் ஆனந்தராஜ், உறையூர் ராஜ்மோகன், ஏர்போர்ட் கஸ்பர், செல்வகுமார், மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர்கள் எத்திராஜ், பாலக்கரை பிலால், ஹெலன் டி எம் எம் சிவா சரவணன் சுந்தர், மாநில செயலாளர் கணபதி, மலைக்கோட்டை சேகர், முன்னாள் மாவட்டத் தலைவர் செல்லப்பன் உய்யகொண்டான் பாஸ்கர், மேலப்புதூர் சத்தியநாதன், மாவட்ட மகளிரணி தலைவி சீலா செலஸ் விஜயலட்சுமி வக்கீல் மோகனாம்பாள் வார்டு தலைவர்கள் வடிவேல் சக்தி முருகன் ஆபிரகாம் ஆண்டாள் தெரு சரவணன் அமிர்தவல்லி காசிம், மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் சந்திரன் பட்டதாரி அணி ரியாஸ் ஸ்ரீரங்கா தியாகராஜன் திலீபன், மீனவர் அணி தனபால், மகளிரணி லட்சுமி சம்சுதீன் ,பாலமுருகன் பாலசுப்பிரமணியன் மாவட்ட செயலாளர் அனந்தபத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணகுமாரி, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஏ,கே, முகுந்தன் அரவிந்தன் முசிறி சுரேஷ் ஜெயப்பிரகாஷ், புத்தூர் அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு