திருச்சியில் காங்கிரசார் வெள்ளையனே வெளியேறு இயக்க நடைபயண யாத்திரை
திருச்சியில் காங்கிரசார் வெள்ளையனே வெளியேற இயக்க தொடர் நடைபயண யாத்திரை நடத்தினர்.
இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர திருநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நாடு விடுதலை அடைந்து ஜனநாயக மக்கள் ஆட்சி அமைக்க பாடுபட்ட தலைவர்களையும் அவர்கள் செய்த தியாகத்தையும் நினைவு கூறும் திருநாள். இந்த இனிய நாளில் தேசத்தந்தை மகாத்மா காந்தியியையும் எண்ணற்ற தேசதலைவர்களையும் போற்றும் வகையில் அவர்கள் கட்டியஅமைதி அன்பு சகோதரத்துவம் அகிம்சை ஆகிய காந்திய வழியில் நின்று சாதி மதம் இனம் மொழிஆகியவைகடந்து நாம் அனைவரும் இந்திய தாயின் புதல்வர்கள் என்ற உணர்வுடன் 75வது சுதந்திர நாளை கொண்டாடும் முன் ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு என்று பிரகடனம்செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையில் திருச்சியில் தொடர் நடைபயண பாதயாத்திரை ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கீழஅடையவளஞ்சான் தெருவில் இருந்து புறப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் இந்த நடைபபயண குழுவிற்கு தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோட்டை தலைவர் சிவாஜி சண்முகம் முன்னிலை வைத்தார் மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் மாநில பொதுச் செயலாளர்கள், வக்கீல் சரவணன், மாவட்ட துணைத்தலைவர்கள் வில்ஸ் முத்துக்குமார். முரளி சிக்கல் சண்முகம், மாவட்ட பொதுச் செயலாளர்கள்* , சிவா, தேவதானம் செந்தமிழ்ச்செல்வன் பொன் தமிழ்ச்செல்வன் வக்கீல் சரவணனசுந்தர் சுந்தர்ராஜன்,
மாவட்ட செயலாளர்கள் அனந்த பத்மநாபன், மலைக்கோட்டை சேகர், மாநகர் பாலக்கரைகோட்ட தலைவர் ஜோசப் ஜெரால்டு,
பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாத்துரை, மணிவேல் பட்டதாரி அணி பிரிவு தலைவர் ரியாஸ் துணைத் தலைவர் ரகமத்துல்லா , சோசியல் மீடியா மாநில தலைவர் ஒருங்கிணைப்பாளர் அபுதாஹீர் * ஸ்ரீரங்கம் கோட்டை துணை தலைவர் கதர்ஜெகநாதன், செல்வி குமரன், லட்சுமணன் ஜெயம் கோபி, அப்துல் குத்தூஸ் , ஜெகதீஸ்வரி ஸ்ரீரங்கம் கோட்ட பொருளாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu