திருச்சியில் தெலுங்கானா மாநில தேர்தல் வெற்றியை கொண்டாடிய காங்கிரசார்
கடந்த மாதம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஷ்கர் மாநிலத்தில் மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலை பெற தொடங்கியது. இதே போல் ராஜஸ்தான் மாநிலத்திலும் பா.ஜ.க. தொடர்ந்து முன்னிலை பெற்றுக்கொண்டே வந்தது. சத்தீஷ்கர் மாநிலத்தில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் என இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன. இறுதியாக பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலை பெற்றது.
ஆனால் நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுக்கொண்டே வந்தது. அதற்கு அடுத்த இடத்தில் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி இரண்டாவது இடத்தில் முன்னிலை பெற்று வந்தது. பாரதீய ஜனதாவிற்கு இறுதி வரை சிங்கிள் டிஜிட் முன்னிலை தான் கிடைத்தது.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றியை முன்னிட்டு திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் வக்கீல் சந்திரன், மாநில செயலாளர் ஜி .கே. முரளி, கோட்டத்தலைவர் பிரியங்கா பட்டேல், மகிளா காங்கிரஸ் தலைவர் ஷீலா செலஸ் , இளைஞர் காங்கிரஸ் மணிவேல் அண்ணாதுரை , மனித உரிமை பிரிவு ஜெயம் கோபி, ஐடி & மீடியா அணி லோகேஸ்வரன், விஜய் பட்டேல், டேவிட் கலைப்பிரிவு ராகவேந்திரா , தெற்கு மாவட்ட துணை தலைவர் எழிலரசன், ஓபிசி அணி தர்கா தளபதி பகதூர்ஷா , நூர் அகமது உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu