மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் சத்யாகிரக போராட்டம்

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் சத்யாகிரக போராட்டம்
X

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் நடந்த சத்யாகிரக போராட்டத்தில் மாவட்ட தலைவர்  ஜவகர் பேசினார்.

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் சத்யாகிரக போராட்டம் நடத்தினார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்தி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமலாக்கதுறை மூலமாக பொய்யான வழக்குகளை பதிவு செய்து சர்வாதிகார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிற மத்திய பி.ஜே.பி. அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரன்,மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்யராஜ், திருச்சி வேலுச்சாமி, கள்ளிக்குடி சுந்தரம், மாநில பொதுச் செயலாளர் வக்கீல் இளங்கோ, வக்கீல் சரவணன், பேட்ரிக் ராஜ்குமார், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி ஜோசப்ஜெரால்டு, ராஜ்மோகன், ஆனந்தராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள், முரளி, மெய்யநாதன், சிக்கல் சண்முகம், மாவட்ட பொதுச் செயலாளர்கள், சிவா,உறையூர் எத்திராஜூ, அண்ணாசிலை விக்டர், மணிவேல் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai and future of education