திருச்சி: காங்கிரசில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு
காங்கிரஸ் கட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகரிடம் விருப்ப மனு கொடுத்தனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆணைக்கிணங்க நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி ஜவஹர் தலைமையில் கட்சிஅலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிர்வாகிகளிடம் மனுக்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் சுஜாதா, வக்கீல் சந்திரன், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் ஹேமா முல்லைராஜன், மாவட்ட துணை தலைவர்கள் வழக்கறிஞர் கே.சரவணன், காளீஸ்வரன், திருக்குறள் முருகானந்தம், வில்ஸ் முத்துக்குமார், சிக்கல் சண்முகம், மெய்யநாதன், ஜீ.கே.முரளி, சக்கரபாணி, மகேஷ் கங்கானி, புத்தூர் சார்லஸ், உய்யகொண்டான் பாஸ்கர், மேலப்புதூர் சத்தியநாதன், சத்தியமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர்கள் எம்.பிலால், செவந்திலிங்கம், ராஜா டேனியல், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜி.எம்.ஜி. மகேந்திரன், மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி ஷீலா செலஸ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu