திருச்சியில் ஜவகர்லால் நேரு சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு

திருச்சியில் ஜவகர்லால் நேரு சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு
X

திருச்சியில் ஜவகர்லால் நேரு சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்தனர்.

திருச்சியில் ஜவகர்லால் நேரு சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநில பொதுச் செயலாளர் ஜி. கே. முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரெக்ஸ், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ஜோசப் ஜெரால்ட்டு, ராஜ்மோகன், ஆனந்தராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் சிக்கல் சண்முகம், வில்ஸ் முத்துக்குமார், கிரேசி,புத்தூர் கணேசன் அன்பழகன், சத்தியநாதன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா, உறையூர் எத்திராஜ், யுவன் ,மாவட்ட செயலாளர்கள் செவந்திலிங்கம், சரவணன் சுந்தர், அனந்த பத்மநாபன், உறந்தை செல்வம்

பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை, பட்டதாரி அணி பிரிவு தலைவர் ரியாஸ் ரகமத்துல்லா அப்துல்இலாகி வீடியோ சோசியல் மீடியா அபு கலைப்பிரிவு அர்ஜுன் தர்கா பகதூர்ஷா உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!