அமைச்சர் நேருவிடம் வாழ்த்து பெற்றார் 55-வது வார்டு தி.மு.க. ராமதாஸ்

அமைச்சர் நேருவிடம் வாழ்த்து பெற்றார் 55-வது வார்டு தி.மு.க. ராமதாஸ்
X
அமைச்சர் நேருவிடம் வாழ்த்து பெற்றார் வெ. ராமதாஸ்.
அமைச்சர் நேருவிடம் வாழ்த்து பெற்றார் திருச்சி 55-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர் வெ.ராமதாஸ்.

திருச்சி மாநகராட்சி 55- வது வார்டில் தி மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சிவா ஆப்டிகல்ஸ் வெ. ராமதாஸ் வெற்றி பெற்றார். இவர் இந்த வார்டில் பெற்ற வாக்குகள் 4,764. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜோசப் ஜெரால்டு 2,108 வாக்குகள் பெற்றிருந்தார்.


55 வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராமதாஸுக்கு அதற்கான சான்றிதழை திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்ட தேர்தல் அதிகாரி வழங்கினார்.

இதனை தொடர்ந்து ராமதாஸ் தி.மு.க. முதன்மை செயலாளரும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான நேருவை சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!