திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த கிளி குஞ்சுகள் பறிமுதல்

திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த கிளி குஞ்சுகள் பறிமுதல்
X
திருச்சியில் வனத்துறை பறிமுதல் செய்யப்பட்ட கிளிகுஞ்சுகள்.
திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட பச்சைக்கிளி குஞ்சுகளை வனத்துறையினர் மீட்டனர்.

திருச்சி பாலக்கரை எடத்தெரு கீழபடையாட்சி தெரு அருகிலுள்ள குருவிகார தெருவில் பச்சைக்கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட அந்த வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 500-க்கும் மேற்பட்ட பச்சைக்கிளி குஞ்சுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இது போல் நூற்றுக் கணக்கில் பலவகையான குருவி குஞ்சுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிளி மற்றும் குருவி குஞ்சுகளை வனத்துறையினர் மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட அந்த வீட்டில் பல ஆண்டுகளாக பறவைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
why is ai important to the future