திருச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூ. கட்சியினர் சைக்கிள் பேரணி
திருச்சியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சி மாநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதியில் நடைபெற்றது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.105, டீசல் விலை லிட்டர் ரூ. 101 சமையல் எரிவாயு விலை ரூ. 1,000 என்று தினசரி உயர்ந்து வருவது மத்திய அரசின் கலால் வரி விதிப்பு முறைகளே இதற்கு முக்கிய காரணமாகும்.
இதன் விளைவாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன. பொதுமக்களின் செலவுச்சுமையை கூட்டி வரும் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், மத்திய அரசு சுங்க, கலால் வரியை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி அக்டோபர் 30-ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சைக்கிள் பேரணியை நடைபெற்றது.
திருச்சி மாநகர் மேற்கு சட்டமன்ற தொகுதியில் மாவட்ட குழு உறுப்பினர் சத்யா தலைமையில் இன்று காலை உறையூரில் துவங்கிய பேரணியை திருச்சி மாவட்ட ஏஐடியூசி பொதுச்செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார். சைக்கிள் பேரணி உறையூர் நாச்சியார் கோவில், கடைவீதி, சாலைரோடு, தில்லை நகர், 80 அடி சாலை, விஸ்வப்ப நாயக்கன் பேட்டை தெரு, புத்தூர் ஹை ரோடு வழியாக அக்ரஹாரம் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
சைக்கிள் ஊர்வலத்தில் மேற்குப் பகுதி செயலாளர் முரளி துணைச் செயலாளர் சரண்சிங், பொருளாளர் ரவீந்திரன் பகுதி குழு உறுப்பினர்கள் ஆனந்தன், நாகராஜன், துரைராஜ், ஆறுமுகம், தங்கையன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநகர தலைவர் முருகேசன், மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், பெயிண்டர் சங்க தலைவர் செந்தில் உள்பட 50-க்கு மேற்பட்டவர்கள் சைக்கிள் ஊர்வலத்தில் பங்கு பெற்று விலை உயர்வுக்கு எதிராக கோஷமிட்டு வந்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு முன்னாள் உறுப்பினர் செல்வராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி நிறைவுரையாற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu