திராவிடர் கழக பெண் நிர்வாகி மீது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
புகார் மனு அளிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர்.
திராவிடர் கழகத்தின் பெண் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் வக்கீல் மாரியப்பன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை பேசியுள்ளார். மேலும் அவர் மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் நோக்கத்தில் வெளியிடும் வகையிலும் வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையிலும் வசனங்களை காட்சிப்படுத்தி குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன் மூலம் அவர்களை தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் உண்மைக்கு புறம்பான அடிப்படையில் அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும் பெண்களின் மாண்பை குறைக்கும் விதத்திலும் கூறி உள்ளார்.எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு கொடுக்கும் நிகழ்ச்சியின் போது திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர், உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu