திருச்சியில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித்தேர்வு

திருச்சியில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித்தேர்வு
X

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சியில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித்தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையத்தால் ஒருங்கிணைந்த பொறியியல் பதவிக்கான போட்டி தேர்வு 02.07.2022 முற்பகல் (10.00 முதல் 01.00 வரை) பிற்பகல் (02.30 முதல் 04.30 வரை) வரை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 5700 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர்.

இத்தேர்விற்கு 17 முதன்மைக் கண்காணிப்பாளளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 5 இயங்குக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர்ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளரும் இயங்குவர்.மேலும் 17 தேர்வு மையத்திற்கு 17 தேர்வு கூட ஆய்வு அலுவலர்களும், 17 வீடியோகிராபரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மிண்ணனு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை திருச்சிமாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!