பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
X
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் வருகிற 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு கொடுத்துள்ள இனப் படுகொலையை தடுத்து நிறுத்த கோரி சிபிஐ, சிபிஐ (எம்), சிபிஐ(எம்எல்) இடதுசாரி கட்சிகள் சார்பில் வருகிற அக்டோபர் 7-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று 03.10.2024 நடைபெற்றது.

கூட்டத்தில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர்,சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மலைக்கோட்டை பகுதி செயலாளர் லெனின், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளரும் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் ,சிபிஐ மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட பொருளாளர் க.சண்முகம், மேற்கு பகுதி குழு செயலாளர் இரா.சுரேஷ் முத்துச்சாமி, கிழக்கு பகுதி செயலாளர் எஸ். சையது அபுதாகிர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டத்தில் 07. 10.2024 திங்கட்கிழமை காலை 10.00மணிக்கு திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ராஜா, சிபிஐ மாவட்ட செயலாளர் சிவா, ஆகியோர் தலைமையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.பாலபாரதி, சிபிஐ (எம்எல்) சார்பில் ஞானதேசிகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்