திருச்சி பள்ளியில் மாசற்ற போகி பண்டிகைக்கான உறுதி மொழி ஏற்பு

திருச்சி பள்ளியில் மாசற்ற போகி பண்டிகை குறித்த உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வருகிற 15ம் தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை ஆகும். போகி பண்டிகையின்போது வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் தேவையில்லாத பயன்பாடற்ற பொருட்களை எல்லாம் தெருவில் போட்டு எரிப்பது பண்டைக்காலம் முதல் பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாக இருந்து வருகிறது.
இப்படி எரிக்கப்படும் போது வெளியேறும் புகையினால் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே மாசற்ற போகி பண்டிகை கொண்டாடப்படும் வகையில் மத்திய மாநில அரசுகள் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் தூய்மை பணியினை பேணி காக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் ஜனவரி14 ம் தேதி போகி பண்டிகை திருநாள் வருவதையொட்டி வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை தெருக்களில் போட மாட்டேன், நெருப்பு வைத்து எரிக்க மாட்டேன் எனவும், திடக்கழிவுகளை சேகரிக்க வரும் வாகனங்களில் தூய்மை பணியாளிடம் மட்டுமே வழங்குவேன் என்றும் மற்றவர்களையும் இதனை கடைபிடிக்க வைப்பேன் என்கிற உறுதிமொழி பள்ளி மாணவர்களிடம் கடைபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் கொண்டு செல்லும் நிகழ்வு 23 வது வார்டில் அமைந்துள்ள உறையூர் கலைப்பள்ளி மான்ய துவக்கப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்விற்கு மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் லலிதா மற்றும் பள்ளியின் செயலர் மஞ்சரி கிருஷ்ணகுமார் மற்றும் அப்பகுதியின் துப்புரவு மேற்பார்வையாளர் மோகன்ராஜ் , பில் கலெக்டர் முத்தமிழ்செல்வன் , அனிமேட்டர் நளினி மற்றும் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu