திருச்சி நகரில் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆணையர் நடவடிக்கை

திருச்சி நகரில் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆணையர் நடவடிக்கை
X

திருச்சி நகரில் பிடிக்கப்பட்ட நாய்கள் மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டன.

திருச்சி நகரில் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆணையர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாகி உள்ளதால் தொடர்ந்து மாநகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கை செய்தி மூலம் புகார்கள் வந்தன. புகார்களைத் தொடர்ந்து நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி தொடங்க மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டார். அதன்படி இன்று பெரியமிளகுபாறை, உடையான்பட்டி பகுதிகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் 15 நாய்கள் பிடிக்கப்பட்டு கோணக்கரை பகுதியில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!