திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஜீவா நினைவு தின நிகழ்ச்சி
திருச்சியில் ஜீவா உருவ படத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரும், இலக்கியவாதியும், பொதுவுடமை இயக்க தலைவருமான ஜீவா என்கிற ஜீவானந்தம் எளிமையின் இலக்கணமாக திகழ்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இயக்க பணிகளுக்காக சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தையில் தங்கி இருந்த இவர் தனது சொந்த குடும்பத்தை மறந்து பொதுமக்களுக்காக பணியாற்றினார்.
குடிசைப்பகுதி மக்களுக்காக வாழ்ந்த அவர் தானும் ஒரு குடிசை வீட்டில் தான் இருந்தார். பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஜீவாவை அவரது இல்லத்திற்கு அழைத்து செல்ல வந்த போது இருந்த ஒரு வேட்டியையும் சோப்பு போட்டு துவைத்து காய வைத்துக்கொண்டிருந்தார் ஜீவா. வேட்டி காயும் வரை காமராஜரும் காத்திருந்து அவரை அழைத்து சென்றார் என இவரது எளிமைக்கு உதாரணமாக கூறப்படுவது உண்டு.
இத்தகைய சிறப்புக்குரிய இலக்கிய பேராசான் ஜீவானந்தம் நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. ஜீவா நினைவுநாளையொட்டி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 26 வது வார்டு வண்ணாரப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் புதிய கிளை துவக்க விழா கிளைச் செயலாளர் பல்கீஸ் ஸ்வேதா தலைமையில்,சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் அலங்கரிக்கப்பட்ட ஜீவாவின் திரு உருவப்படத்திற்கு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.கட்சியின் கொடியினை மாநகர் மாவட்ட செயலாளர் சிவா ஏற்றி வைத்தார். மேற்குப் பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி துணைச் செயலாளர் இப்ராஹிம்உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu