கல்லூரி மாணவி சாவுக்கு காரணமான காதலனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவி சாவுக்கு காரணமான காதலனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் கல்லூரி மாணவி சாவுக்கு காரணமான காதலன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சியில், கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் காதலனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி தில்லைநகர் குப்பாங்குளம்பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). இவரது மகள் சங்கீதா (வயது 20). திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவருக்கும் திருச்சி வரகனேரி பகுதியில் உள்ள வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இவர்களின் காதல்விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே சங்கீதாவின் வீட்டில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்புதெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து சங்கீதா தனது காதலனிடம்தன்னை திருமணம்செய்து கொள்ளுமாறு கேட்டு உள்ளார். அதற்கு அவருடைய காதலன் மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிக மன உளைச்சலில் இருந்த சங்கீதா வீட்டில் தூக்குப்போட்டுதற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தில்லைநகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அங்குதிரண்ட சங்கீதாவின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்,அவரை தற்கொலைக்கு தூண்டிய காதலன் சரவணக்குமாரையும்,அவரது தந்தை மூர்த்தியையும் கைது செய்ய வேண்டி ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். உரிய வகையில் விசாரணை நடைபெறும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!