திருச்சியில் கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி

திருச்சியில் கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி
X

பைல் படம்.

திருச்சியில் கல்லூரி மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது 19). திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய தந்தை சிவானந்தம் இலங்கையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற அஸ்வின் திடீரென கல்லூரியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட கல்லூரி நிர்வாகம் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வின் எதற்காக தற்கொலை முயற்சி செய்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு