திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பிச்சை எடுக்கும் போராட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பிச்சை எடுக்கும் போராட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்த பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டணி, அகில இந்திய ஏழை மக்கள் கட்சி, அமைப்புசாரா தொழிற்சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் இன்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சம்சுதீன் தலைமை தாங்கினார்.

போராட்டம் நடத்தியவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் 7-வது வார்டு காயிதே மில்லத் நகர் மற்றும் மலை அடிவாரம் பகுதியில் ஏறத்தாழ 300 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதியும் மாநகராட்சி செய்து தந்ததில்லை குறிப்பாக இந்தப் பகுதியில் கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது என கூறப்பட்டு இருந்தது.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்