மனு கொடுத்தவுடன் மாற்றுத்திறனாளிக்கு உதவிய திருச்சி கலெக்டர் சிவராசு
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர்கள் ராமர்-துளசிமணி தம்பதியினர். கூலித் தொழில் செய்து வரும் இந்த தம்பதிக்கு சம்பூர்ணம் (வயது 23) என்ற மகள் உள்ளார். இவருக்கு இரண்டு கால்களும் பாதிப்படைந்து மாற்றுத்திறனாளியாக உள்ளார்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவை நேரில் சந்தித்த இந்த தம்பதியினர் தனது மாற்றுத்திறனாளி மகளுக்கு சக்கர நாற்காலி கொடுத்து உதவுமாறு மனு கொடுத்தனர்.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உடனடியாக சம்பூர்ணத்திற்கு சக்கர நாற்காலி வழங்கிட மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து உடனடியாக ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பிலான சக்கர நாற்காலியை வரவழைக்கப்பட்டது. அதனை மாவட்ட கலெக்டர் சிவராசு சம்பூர்ணத்திற்கு வழங்கினார். இதை உடனடியாக செய்வார்கள் என்று எதிர்பார்க்காத சம்பூரணமும், அவரது பெற்றோரும் கலெக்டருக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu