திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி கொட்டப்பட்ட இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி கொட்டப்பட்டில் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று காலை திடீர் என இந்த முகாமிற்கு சென்றார். முகாமில் வசிக்கும் நபர்களிடம் குறை கேட்டார். பின்னர் அங்கு அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்த கலெக்டர் குறைகளை உடனடியாக களைவதற்கு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி அபிராபி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai healthcare technology