சுதந்திர தினத்தன்று திருச்சியில் மது பான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

சுதந்திர தினத்தன்று திருச்சியில் மது பான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
X
சுதந்திர தினத்தன்று திருச்சி மாவட்டத்தில் மது பான கடைகளை மூட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து மது பான சில்லறை விற்பனை கடைகளும் அதனுடன் இணைந்து நடத்தப்படும் மது கூடங்களும் மூடப்படவேண்டும். இதே போல் ஓட்டல்களில் நடத்தப்படும் மது பான பார்களும் மூடப்படும். அரசின் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!