திருச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர், பார்வையாளர் ஆய்வு

திருச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர், பார்வையாளர் ஆய்வு

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர், பார்வையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆட்சியர், பார்வையாளர் ஆய்வு செய்தனர்.

பாராளுமன்ற பொது தேர்தல், 2024 ஆனது கடந்த 19.04.2024 அன்று முடிவடைந்த நிலையில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, பாராளுமன்ற பொதுத்தேர்தல், 2024 க்கான வாக்கு எண்ணும் பணியானது நாளை 04.06.2024 அன்று நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால், வாக்கு எண்ணும் பணியினை கண்காணித்திட ஏதுவாக திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 139.ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, 140.திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்ற தொகுதி, 141.திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஐஏஎஸ் அதிகாரி தினேஷ்குமாரும், 142.திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, 178.கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் 180.புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் ராஜீவ் பிரசாத்தும் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்யப்படப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, மேற்கண்டுள்ள வாக்கு எண்ணிக்கை திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை புரிந்து வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை பாh;வையிட்டனர்.

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள் விபரம்: வ. எண்: எண் மற்றும் சட்டமன்ற தொகுதியின் பெயர் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை

ஆண் பெண் பிற கூடுதல்

01. 139. ஸ்ரீரங்கம் 339 109641 113067 17 222725

02. 140.திருச்சிராப்பள்ளி (மேற்கு) 270 82387 86202 12 168601

03. 141.திருச்சிராப்பள்ளி(கிழக்கு) 255 78846 80382 24 159252

04. 142.திருவெறும்பூர் 296 88368 92565 35 180968

05. 178.கந்தர்வக்கோட்டை(தனி) 239 72757 76823 6 149586

06. 180.புதுக்கோட்டை 266 80148 87805 8 167961

கூடுதல் 1665 512147 536844 102 1049093

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் பதிவான அஞ்சல் வாக்குகள் விபரம்:

01. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்ட

அஞ்சல் வாக்குள் எண்ணிக்கை : 2139

02. அரசு அலுவலா;களால் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை : 6247

03. இராணுவத்தினரால் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை : 272

கூடுதல் : 8658

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது திட்டமிடப்பட்டுள்ள சுற்றுகளின் எண்ணிக்கை விபரம்:

வ. எண்: எண் மற்றும் சட்டமன்ற தொகுதியின் பெயர் மேசைகளின் எண்ணிக்கை , சுற்றுகளின் எண்ணிக்கை

01. 139. ஸ்ரீரங்கம் 14 25

02. 140. திருச்சிராப்பள்ளி (மேற்கு) 14 20

03. 141.திருச்சிராப்பள்ளி (கிழக்கு) 14 19

04. 142.திருவெறும்பூர் 14 22

05. 178.கந்தர்வக்கோட்டை (தனி) 14 18

06. 180. புதுக்கோட்டை 14 19

அஞ்சல் வாக்குகள் ௧௧ 01

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் எண்ணிக்கை விபரம்

வ. எண் எண் மற்றும் சட்டமன்ற தொகுதியின் பெயர், நுண் பார்வையாளர்கள் எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களின் எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களின் எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை முகவர்கள் எண்ணிக்கை

01. 139. ஸ்ரீரங்கம் 17 17 17 100

02. 140.திருச்சிராப்பள்ளி (மேற்கு) 17 17 17 198

03. 141.திருச்சிராப்பள்ளி(கிழக்கு) 17 17 17 197

04. 142.திருவெறும்பூர் 17 17 17 212

05. 178.கந்தர்வக்கோட்டை(தனி) 17 17 17 202

06. 180.புதுக்கோட்டை 17 17 17 208

அஞ்சல் வாக்குகள் 15 14 28 134

கூடுதல் 117 116 130 1251

Tags

Next Story