திருச்சி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருச்சி மாநகராட்சி  வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
X

திருச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

திருச்சியில் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம், பொன்மலை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம் கோஅபிஷேகபுரம் கோட்டங்களுக்கு உட்பட்ட 65 வார்டுகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று இரவு தொடங்கிய இந்த பணியானது அதிகாலை முடிவுற்றது.

பாதுகாப்புடன் கொண்டு பதிவு எந்திரங்களும் வார்டு வாரியாக தனித்தனியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. இந்த பணியினை திருச்சி மாவட்ட மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!