திருச்சி மாநகராட்சி சுகாதார துணை மையங்களுக்கு கலெக்டர் பூமி பூஜை

திருச்சி மாநகராட்சி சுகாதார துணை மையங்களுக்கு கலெக்டர் பூமி பூஜை
X
திருச்சியில் மாநகராட்சி துணை சுகாதார மையங்களுக்கு இன்று கலெக்டர் சிவராசு தலைமையில்  பூமி பூஜை போடப்பட்டது.
திருச்சி மாநகராட்சி சார்பில் சுகாதார துணை மையங்களுக்கு கலெக்டர் சிவராசு இன்று பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, நான்கு கோட்டப் பகுதிகளிலும் தற்போது 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேற்கூறிய 18 சுகாதார நிலையங்களுக்கும் தலா இரு துணை நல மையங்கள் மற்றும் இரு சுகாதார ஆய்வகங்கள் தேசிய நகர்புற சுகாதார திட்டம் 2021-22ன் கீழ், 15வது நிதிக் குழு மான்ய நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் துணை நல மையங்கள் மற்றும் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வகங்கள் மொத்தம் ரூ.9.44 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இம்மையங்களில் யோகா மையம், நோயாளிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மற்றும் கூடுதல் 3 அறைகள் ஆகியவை 843.62 ச.அடியில் அமைக்கப்படுகிறது.

அதன்படி, மேற்கூறிய அனைத்து பணிகளையும் அடிக்கல் நாட்டும் விதமாக கருமண்டபம் பகுதி, தெற்கு தெருவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு பூமி பூஜை செய்து பணிகளை இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், நகரப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி, செயற்பொறியாளர் பி.சிவபாதம், உதவி ஆணையர் எஸ்.செல்வ பாலாஜி, முன்னாள் துணைமேயர்அன்பழகன் மற்றம் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare