முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை: ட்ரோன்கள் பறக்க தடை உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை: ட்ரோன்கள் பறக்க தடை உத்தரவு
X

முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருவதையொட்டி ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை அக்டோபர் 6ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்தடைகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு காலை 11 மணியளவில் அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

இது தொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர், வட்ட செயலாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் காலை 11 மணிக்கு திரளாக வருகை தந்து முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் எடுத்து உள்ளார்.

முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக முதல்வர் அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் இங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் புறப்பட்டு செல்கிறார். மாலையில் மீண்டும் திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை செல்ல இருக்கிறார். எனவே அவர் வரும் நேரங்களில் முதல்வர் செல்லும் வழித்தட பாதைகளில் ஆளில்லா சிறிய வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி யாராவது ட்ரோன்கள் பறக்க விட்டால். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா