திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய வழக்கறிஞர்

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய வழக்கறிஞர்
X

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ.ராஜேந்திரன் தீபாவளி பரிசுகளை வழங்கினார்.

திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் ஏ. ராஜேந்திரன் தீபாவளி பரிசுகளை வழங்கினார்.

திருச்சி கோர்ட்டில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் ஏ.ராஜேந்திரன். திருச்சி மாநகராட்சி பகுதி பாரதி நகரில் குடியிருந்து வரும் இவர் பாரதி நகரில் அன்றாடம் குப்பை சேகரிப்பு மற்றும் சாக்கடை கழிவு நீர் அகற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பரிசு வழங்குவது வழக்கம்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் உள்பட பரிசு பொருட்களை வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!