திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு புகார் பெட்டி

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு புகார் பெட்டி
X
பொதுமக்கள் புகார் தொடர்பான மனுக்களை அளிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் அளிக்கவரும் பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு செல்ல வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கும்போது, மனுதாரர்களை செல்போனில் அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!