திருச்சி கிறிஸ்துமஸ் விழாவில் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் நலத்திட்ட உதவி

திருச்சி கிறிஸ்துமஸ் விழாவில் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் நலத்திட்ட உதவி
X

திருச்சியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகளை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருச்சியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் வழங்கினார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி மேல புலிவார்டுரோடு தேவர் ஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் மலைக்கோட்டை பகுதி தி.மு.க. செயலாளர் மதிவாணன் வரவேற்புரையாற்றினார். திருச்சி ஜேம்ஸ் அகாடமி யூஜின் அடிகளார் வாழ்த்துரை வழங்கினார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர், இனிகோ இருதயராஜ் சிறப்புரை ஆற்றினார். மேலும் அவர் பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தார். இந்த விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு 25 பேருக்கு இஸ்திரி பெட்டி, 50 பேருக்கு தையல் எந்திரம் மற்றும் டீ கேன், தள்ளுவண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் வழங்கினார். எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சம்பள தொகையின் மூலம் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் விழாவில் தெரிவித்தார்.

இந்த விழாவில் தி.மு.க. மூத்த நிர்வாகி வண்ணை அரங்கநாதன், பகுதி செயலாளர்கள் மணிவேல், ராஜ்முகமது, மெடிக்கல் மோகன், முன்னாள் கவுன்சிலர் லீலா வேலு, நிர்வாகிகள் புஸ்பராஜ், ஆண்டனி ராஜாமணி உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மொராய்ஸ் சிட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கேக் பெட்டகம் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது