குருத்தோலை ஞாயிறையொட்டி திருச்சியில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

குருத்தோலை ஞாயிறையொட்டி திருச்சியில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
X

குருத்தோலை ஞாயிறையொட்டி திருச்சியில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.

குருத்தோலை ஞாயிறையொட்டி திருச்சியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று. ஈஸ்டர் பண்டிகை வருகிற 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இன்று குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடைபெற்றது.திருச்சி கிறிஸ்தவ ஆலயங்களில் பங்கு தந்தை தலைமையில் சிறப்பு பலிபூஜைகள் நடத்தப்பட்டது. வருகிற வியாழக்கிழமை பெரிய வியாழன், அதனை தொடர்ந்து மறு நாள் புனித வெள்ளியும் வர உள்ளது.

குருத்தோலை ஞாயிறையொட்டி திருச்சி மேலப்புதூர் மற்றும் துரைசாமி புரம் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது பிரார்த்தனை பாடல்களையும் பாடியபடி சென்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!