முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
தொழிற்கல்வி படிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2021-22-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக், பி.டி.எஸ்., எம். பி.பி.எஸ்., பி.எட், பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.பார்ம், பி.எஸ்.சி. நர்சிங், பிபிடி, எல்.எல்.பி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., பி.எஸ்.சி.அக்ரி, பி. எஸ்.சி., பயோடெக், பி.ஆர்க், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட பல தொழிற்கல்வி பயில கல்லூரிகளில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன், மகளுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என புதுடெல்லியில் உள்ள மத்திய முப்ப டைவீரர் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.ksb.gov.in. 2021 22-ம் ஆண்டில் பிரதமரின் கல்வி உதவித்தொகை முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு பிரதிமாதம் ரூ.3 ஆயிரம் (ரூ.36 ஆயிரம் ஆண்டுக்கு) ஆண் வாரிசுகளுக்கு பிர திமாதம் ரூ.2,500 (ரூ.30 ஆயிரம் ஆண்டுக்கு) வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். 2021-22-ம் ஆண்டில் முதலாமாண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு மட்டுமேயானது.
தற்போது முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் அதிக அளவில் விண்ணப்பித்திட ஏதுவாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க காலவரம்பு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது. எனவே தொழிற்கல்வி பயில தங்களது மகன் அல்லது மகள்களை 2021-22-ம் கல்வியாண்டில் கல்லூரியில் சேர்ந்துள்ள திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu