திருச்சி மாவட்டத்தில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் பாதிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் கொசுக்களால் மர்ம காய்ச்சலால் மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 34 பேர்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின்எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது. இதில் 83 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தை களாவர். இதற்கிடையே நேற்று 2 பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த அடிப்படையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில்உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக மாறி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் திருச்சிமாவட்டத்தில் உள்ள வெவ்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அனைவரும் நலமுடன்இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu