திருச்சி மாநகராட்சி 5 வார்டுகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
திருச்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்கள்.
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் மு. அன்பழகன் ஆகியோர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 மற்றும் 5 வார்டு எண்.57,58 மற்றும் 62ஆகிய வார்டுகளுக்கு எடமலைப்பட்டிபுதுர் தம்பியப்பா திருமணமண்டபம் மற்றும் மண்டலம் 5, வார்டு எண் 28,29 ஆகிய வார்டுகளுக்கு ஜாகிர் உசேன்பார்க் மைதானத்தில் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
மக்களுடன் முதல்வர் என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று, மாமன்ற உறுப்பினர்களுடன் முகாமை கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.
பொதுமக்கள் இம்முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள தெரிவித்தும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும் எளிதாகவும் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் என்ற மேயர் அன்பழகன் தெரிவித்தார்.
இந்முகாமில் மண்டலத்தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, உதவி ஆணையர்கள் சண்முகம், வேங்கட்ராமன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் முத்துச்செல்வம், பைஸ் அகமது, கமால் முஸ்தபா ,சுபா, கவிதாசெல்வம் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu