/* */

திருச்சியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற செஸ் போட்டி

கார்மல் பல்நோக்கு சமூக கூடத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அளவிலான சதுரங்கப் போட்டி இன்று துவங்கியது.

HIGHLIGHTS

திருச்சியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற செஸ் போட்டி
X

திருச்சியில் நடைபெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டி.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள கார்மல் பல்நோக்கு சமூக கூடத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அளவிலான சதுரங்கப் போட்டி இன்று துவங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை கும்பகோணம் அருள்தந்தை பிரிட்டோ துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை சிகரம் சமூக பல்நோக்கு சேவை மையம் மற்றும் வெற்றி பொதுநல சங்கம் இணைந்து நடத்தி வருகின்றனர். 6 சுற்றுகள் முறையில் இந்த போட்டி நடைபெற்றது.

இது குறித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து ஒரு சில வீரர்கள் பங்கேற்றாலும், தமிழகத்தில் கிராமங்களில் முடங்கிக் கிடக்கும் விளையாட்டுத் திறன் அதிகம் உள்ள மாற்றுத் திறனாளிகளை, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்கள் மூலம் அரசு கண்டறிந்து, அவர்களுக்கு மாவட்டம் தோறும் சிறப்பு விளையாட்டு திறன் பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Updated On: 11 Dec 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  4. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  5. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  6. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  7. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  8. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  9. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்